தொலைபேசி அல்லது இணையச் சேவைகள் பற்றிய புகார்களைத் தீர்க்க நாங்கள் உதவுகிறோம்.
நாங்கள் பிறர்சார்பற்ற இலவச சேவையை வழங்குகிறோம். அதன் அர்த்தம் நாங்கள் யாருக்கும் ஆதரவாக இல்லை. அதோடு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தொலைதொடர்புத் தொழில்துறைக் குறைதீர்ப்பாளர் பின்வருவனவற்றில் உதவ முடியும்
-
ஒப்பந்தங்கள்: நீங்கள் ஒப்பந்தம் செய்த ஒன்று உங்களுக்கு கிடைக்கவில்லையா?
-
பில்கள்: உங்கள் பில் தவறென்று எண்ணுகிறீர்களா அல்லது அதைச் செலுத்துவதில் சிக்கல் உள்ளதா?
-
பழுதுகள் மற்றும் சேவையில் சிரமங்கள்: உங்கள் தொலைபேசி அல்லது இணையச் சேவை வேலை செய்யவில்லையா?
-
இணைப்புத் துண்டிப்புகள்: உங்கள் தொலைபேசி அல்லது இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதா?
-
கடன் சேகரிப்பு: உங்களதல்லாத கடனைச் செலுத்துமாறு கேட்கப்பட்டீர்களா?
-
சேவை நடைமுறைகள்: உங்களால் செலுத்த முடியாத திட்டம் அல்லது உபகரணம் உங்களிடம் விற்கப்பட்டதா?
நாங்கள் உங்களுடனும் சேவை வழங்குநர்களுடனும் எவ்வாறு வேலை செய்கிறோம்
நீங்கள் அல்லது நீங்கள் யாருக்காக அழைக்கிறீர்களோ அவர் தொலைபேசி அல்லது இணைய சேவையைப் பயன்படுத்தினால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். அது வீட்டிலோ சிறு வணிகத்திலோ பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கலாம். அது பின்வருமாறு வேலை செய்கிறது:
-
நீங்கள் உங்கள் சேவை வழங்குநருடன் புகாரைத் தீர்க்க முயல்வீர்கள்.
-
உங்களால் உங்கள் சேவை வழங்குநருடன் புகாரைத் தீர்க்க முடியவில்லையெனில், எங்களை அழைக்கவும்.
-
எங்களால் அந்தப் புகாரைக் கையாள முடியுமா என்று தீர்மானிப்போம்.
-
உங்களுடனும் வழங்குநருடனும் அந்தப் புகாரைத் தீர்க்க வேலை செய்வோம்.
-
நீங்களும் வழங்குநரும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், எப்படி புகாரைத் தீர்ப்பது என்பதைக் குறைதீர்ப்பாளர் தீர்மானிக்கலாம்.
உங்களுக்கு உதவ ஒருவரை அழைப்பது
உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது நிதி ஆலோசகர் போன்ற ஒருவரைக் கூட உங்களுக்காகவோ அல்லது உங்கள் வணிகம் சார்பாகவோ புகாரளிக்க நீங்கள் அழைக்கலாம். உங்கள் அங்கீகாரப் படிவங்களை தொலைபேசி மூலம் கோருங்கள் அல்லது எங்கள் வலைத்தளத்தில் அவற்றைக் கண்டறியுங்கள்.
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
நீங்கள் எங்கள் வலைத்தளம் www.tio.com.au/complaints அல்லது 1800 062 058 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் புகாரளிக்கலாம்.
PO Box 276, Collins Street West, VIC 8007 என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம் அல்லது அதை 1800 630 614 க்கு தொலைநகல் செய்யலாம்.
ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியை நீங்கள் பயன்படுத்தத் தேவைப்பட்டால், 131 450 இல் மொழிப்பெயர்ப்பாளர் சேவையை அழைக்கவும். நீங்கள் எங்களுடன் பேச அவர்கள் உதவுவார்கள். அவர்கள் இலவசமாக சேவையை வழங்குகிறார்கள்.
மேற்கூறிய எண்கள் அல்லது மொபைல் ஃபோன்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.